பெலியத்த கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது

0
263

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுடம்பே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here