பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அனைத்து அரச அலுவலர்களுக்குமான அறிவித்தல்

Date:

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.


ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு, அத்தகைய விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...