இன்றைய வானிலை நிலவரம்

Date:

இன்றையதினம் (27) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 50-55 கி.மீ. வேகம் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...