அண்டை நாடான ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து சீனாவில் 17.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 60 புதிய தொற்றாளர்கள் பதிவாகிய பிறகு, ஷென்சென் வணிக மையத்தில் உள்ள அனைவரும் மூன்று சுற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதைத் தவிர அனைத்து வணிகங்களையும் மூட அல்லது வீட்டிலிருந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 32,000 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகிய ஹாங்காங் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் சமீபத்திய தொற்று அதிகரிப்பு குறைவாகவே உள்ளது.