இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், பல ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்கவும் புதுச்சேரி சார்பில் குழு அமைக்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் தெரிவித்தார்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் 43.4 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட சபாநாயகர் காரைக்காலுக்கு விஜயம் செய்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், “காரைக்காலில் இருந்து இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்ட இயந்திர படகுகள் இன்னும் அந்நாட்டில் உள்ளன. படகுகள் இல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, போக்குவரத்து அமைச்சர் சந்திரா மற்றும் எனது தலைமையில் ஒரு குழுவை அமைத்து, திட்டங்களை வகுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இலங்கை அரசின் அதிகாரிகளை சந்தித்து, இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் எமது இயந்திரப் படகுகளை மீட்டெடுப்போம்.
கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்கும் பணியில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும், சந்திர பிரியங்காவும் இணைந்து கொள்வார்கள் என்றும் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் கைப்பற்றி வருகிறது.
N.S