மீண்டும் கொழும்பு – யாழ் ரயில் சேவை

Date:

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...