இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 1,347 மருந்து வகைகளில் மொத்தம் 112 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக 150 மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்ததாகவும், தற்போது அது 112 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
ஆண்டுதோறும் மருந்து இறக்குமதிக்காக ரூ.50 பில்லியன் செலவிடப்பட்டுகிறது. கூடுதலாக ரூ.40 பில்லியன் இந்த ஆண்டு மருந்து இறக்குமதிக்காக அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலைகளில் பல நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்து நிலைமையை சரி செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
N.S