Sunday, November 24, 2024

Latest Posts

AI தொழிநுட்பத்தின் மூலம் ரூபவாஹினியில் செய்தி – சிங்கள மொழியில் பரீட்சார்த்தம்

(Artificial Intelligence- AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முதல் தடவையாக சிங்கள மொழியில் செய்தி அறிக்கை அனுபவத்தை நேயர்களுக்கு வழங்க இலங்கை அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Rupavahini) முன்வந்துள்ளது.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உலகளவில் அநேக துறைகள் பல வளர்ச்சிகளை அடைந்து வருகின்றன.

2050ஆம் ஆண்டளவில் AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி அநேக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உலகளவில் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சி , வானொலி மற்றும் சமூக வலைத்தளங்களில் AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதிகளவிலான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு AI தொழிநுட்பத்தை அல்லது chatGPTஐ பயன்படுத்திய முதலாவது தொலைக்காட்சியாக அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

அண்மையில் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வு ஒலிபரப்பப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுக்கு நேயர்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைக்கப்பட்டது.

அதன் அடுத்தக் கட்டமாக AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முதல் தடவையாக சிங்கள மொழியில் செய்தி அறிக்கையை நிகழ்த்த அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது.

அதன்படி, நேற்று (05) இரவு 8 மணி பிரதான செய்தி அறிக்கையில் தொலைக்காட்சி துறையில் பிரபலமான இரு செய்தி வாசிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன இருவரையும் பயன்படுத்தி AI தொழிநுட்பம் மூலம் செய்தி முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும், செய்தித் துறையில் நவீன அனுபவத்தை நேயர்களுக்கு வழங்க அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் முடிந்துள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.