அல்லைப்பிட்டி படுகொலை நினைவேந்தல்

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை இடம்பெற்ற இடத்தில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு அல்லப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்கு தந்தையுமான பேனார்ட் றெக்னோ சிவில் சமூக செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் சிவில் சமூக செயற்பாட்டாளர் அல்லைப்பட்டி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...