பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9ஆம் திகதி கோட்டாகோகம கிராமத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே பொலிஸ் மா அதிபரின் கட்டாய விடுப்புக்கும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இடமாற்றத்துக்கும் காரணம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.