பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விரைவில் இராஜினாமா..

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைவாக இது மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்பாக 21வது திருத்தத்திற்கு தடையாக உள்ள பசில் ராஜபக்ச மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வகையில், இந்த இராஜினாமா அரசியல் ரீதியில் மிகவும் முன்னேறிய, கூர்மையான மற்றும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...