மைத்திரியின் கடிதத்திற்கு புடின்னின் பதில் கடிதம்

Date:

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடந்த 5ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி புடின் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரியினால் நேற்று சிறிசேனவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏரோஃப்ளோட் இலங்கையுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்ய தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு ரஷ்ய தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க எரிபொருள், உரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலையிடுமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...