இரண்டு வருடங்களாக அழிக்கப்பட்ட நாட்டை ஓரிரு நாளில் மீளக் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எனவே நாட்டை மீளக் கட்டியெழுப்ப பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பிரதித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை ஒப்படைத்தால் ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தம்பட்டம் அடிக்கும் எதிர்க்கட்சியில் உள்ள குழுக்கள் ஏன் பிரதமருக்கு அவ்வாறான கால அவகாசத்தை வழங்கவில்லை என அவர் கேட்கிறார்.
எதிர்க்கட்சிகள் இழுத்தடிக்காமல் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் அல்லது நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற பிரதமருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திரு.விஜேவர்தன கூறுகிறார். நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இழுத்தடிப்பதாக அவர் மேலும் கூறினார்.
இன்று கொழும்பில் அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.