நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட சகல தாங்கிகளின் உரிமையாளர்களையும் நாளை (01) கடமைக்கு சமூகமளிக்குமாறு IOC பணிப்புரை விடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்காக சுமார் 7,500 மெற்றிக் தொன் டீசலை ஐஓசியிடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான கொடுப்பனவுகளையும் செய்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.