டிரானின் அதிரடி பணிப்பில் STF களத்தில்

0
200

தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின்படி இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, இந்த பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தென் மாகாணத்தில் இருந்து 20 விசேட குழுக்களும் மேல் மாகாணத்தில் இருந்து 15 விசேட குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துரித நடவடிக்கை மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர பாதாள உலக தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மறைந்திருக்கும் இடங்கள் மற்றும் துப்பாக்கிகள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை தேடும் பணியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here