கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
உடன்படிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் இந்த உரை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.