ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இன்று (27) முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்தப் பயணம் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வெளிவிவகாரப் பிரிவின் அழைப்பின் பேரில் இடம்பெறுகிறது.
இந்த விஜயத்தின்போது, BJP தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகளை JVP குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BJP மற்றும் JVP இடையிலான அரசியல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு கட்சிகளின் அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதும் இந்த விஜயத்தின் நோக்கங்களில் அடங்குவதாக BJP தெரிவித்துள்ளது.
டில்வின் சில்வாவுடன் JVP மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அதம்பாவா, மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேசப் பிரிவு உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
