மலேசியாவில் முருகனை வழிபட்டு பின் பிரதமரை சந்தித்த ஆளுநர் செந்தில்!

0
293

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்துமலை குகை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கோவில் கமிட்டியின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர்.ஆர்.நட்ராஜா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோரால் செந்தில் தொண்டமான் கௌரவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை (09.07.2024) கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தினார்.

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசிய பிரதமருடன் கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.

இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here