8 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து எட்டுப்பேர் அகதிகளாக சென்று இன்று அதிகாலை தமிழ்நாட்டின்  தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இங்குள்ள ஈழத்தமிழர்கள் வாழ வழி இன்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி  கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற எட்டு பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதனர்.

தமிழக போலீசாருக்கு  கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் எட்டு ஈழத் தமிழர்களையும்  மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழகம் சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த  எட்டு பேர்களில் இரு பெண்களும், இரு ஆண்களும் 4 சிறுவர்களும்  மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

தமிழகம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பங்கள் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் மற்றும் ஆணைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...