தெஹிவளை உப பொலிஸ் பரிசோதகர் போதைப் பொருட்களுடன் கைது

0
182

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரைக் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here