ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாளை மறுதினம் அறிவிக்கும் விமல் அணி

Date:

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம் (04) அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், திலித் ஜயவீரவே முன்மொழியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாளை மறுதினம் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள உள்ளனர்.

இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியன் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, காமினி வலேபொட, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...