பொரள்ளையில் உள்ள மகசீன் சிறைச்சாலையில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து. அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று இரவு சுமார் 10.20 PM மணியளவில், சிறையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் இந்தக் முரண்பாடு தொடங்கியது.
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது சிறை வளாகத்திற்குள் பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
