கொழும்பு, மாளிகாவத்தை பி.சி.சி. (BCC) பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் சிறிய தந்தை (சித்தப்பா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காக அந்தப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ள மாளிகாவத்தை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
