எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கேள்வி: மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா?
பிரதமர்: “ஆம். கட்டாயமாக அது நடத்தப்பட வேண்டும். சட்டத்தின் பிரகாரம் அது நடத்தப்பட வேண்டும். பொருத்தமான நேரத்தில் தேர்தல் ஆணைக்குழு அதனை அறிவிக்கும்.”
கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
