இன்னும் சற்று நேரத்தில் இலங்கை மண்ணில் காலடி வைக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு இலங்கை திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சவின் விமானம் இன்று இரவு 12 மணிக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச ஜூலை 9ஆம் திகதி விமானப்படை விமானத்தில் மாலைதீவுக்கு புறப்பட்டார்.

சில நாட்களில் சிங்கப்பூர் சென்று தாய்லாந்து சென்றுவிட்டார் கோட்டாபய ராஜபக்சவின் நாடு திரும்புவது தொடர்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் திகதி அல்லது தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...