வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா நாளைச

Date:

ரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு  நடைபெறவுள்ளது. காலை 8  மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும். தொடர்ந்து  சுவாமி  தேரில் எழுந்தளி உலா வருவார்.

சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில்  இடம்பெறும். இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு இடம்பெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி  5 மணிக்குவங்கக் கடல் நோக்கி புறப்படுவார்.

மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறும்.

இறுதியாக அன்றைய தினம்  மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...