தெமட்டகொட துப்பாக்கிச் சூடு – முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

0
18

கொழும்பு – தெமட்டகொட, கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கறுப்புப் பாலத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சாரதி, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் எவ்வாறு சம்பவ இடத்திற்கு வந்தனர், துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர் எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்பன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்தில் கிடைக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here