6 மாவட்டங்களில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

0
13

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 6 மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு அபாயத்திற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலை 3 – சிவப்பு எச்சரிக்கை

(வெளியேற்றம் தொடர்பான அபாய எச்சரிக்கை)

  • காலி – நெலுவ
  • களுத்துறை – வல்லாவிட்ட
  • கண்டி – பஸ்பாகே கோரளே
  • கேகாலை – மாவனெல்ல, தெஹியோவிட்ட, அரநாயக்க, யட்டியந்தோட்டை, தெஹிஓவிட்ட
  • நுவரெலியா – நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு
  • இரத்தினபுரி – இரத்தினபுரி

நிலை 2 – அம்பர் எச்சரிக்கை

(அவதானமாக இருக்க வேண்டிய அபாய எச்சரிக்கை)

  • கொழும்பு – பாதுக்க
  • காலி – நாகொட, தவளம
  • களுத்துறை – பாலிந்தநுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய
  • கண்டி – கங்க இஹல கோரளே, உடபலாத்த
  • கேகாலை – வரக்காபொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல
  • மாத்தறை – அத்துரலிய, கொட்டபொல, அக்குரஸ்ஸ, பிடபெத்தர
  • நுவரெலியா – தலவாக்கலை
  • இரத்தினபுரி – பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவான, எலபாத்த

நிலை 1 – மஞ்சள் எச்சரிக்கை

(விழிப்புடன் இருக்க வேண்டிய அபாய எச்சரிக்கை)

  • கொழும்பு – சீதாவக்க
  • காலி – நியாகம, பத்தேகம
  • கம்பஹா – மீரிகம, அத்தனகல்ல
  • கண்டி – யட்டிநுவர, பாததும்பர, தொலுவ, உடுநுவர
  • கேகாலை – ரம்புக்கண
  • குருநாகல் – அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவபிட்டிய
  • மாத்தறை – பஸ்கொட
  • இரத்தினபுரி – எஹலியகொட, கஹவத்த, கொலொன்ன, இம்புல்பே

அதிக மழை தொடர்ந்து பெய்யும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here