இன்றும் பல இடங்களில் மழை

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும். 

வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...