நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Date:

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் காலம் அக்டோபர் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர்களின் பிணை மனுக்கள் மீதான தீர்மானம் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...