மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

0
24

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) இரவு சுமார் 8.20 மணியளவில், காரில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள், சம்பவத்திற்குப் பயன்படுத்திய காரை வேறொரு இடத்தில் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here