தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, தனக்கு சபாநாயகர் பதவியைப் பெறுவதில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“ஃபைசர் முஸ்தபாவை சபாநாயகராக நியமிக்கத் திட்டம்?” என்ற தலைப்பில் LNW வெளியிட்ட செய்திக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் LNW ஊடகத்துடன் தொடர்புகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதுடன், ஜனாதிபதி சட்டத்தரணியாகத் தனது சட்டத் தொழிலையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தனது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
