பாலியல் சேட்டை: NPP உறுப்பினர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்

0
25

இளம் பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினரை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் உதும்பரா தசநாயக்க நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொல்கஹவெல பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தினேஷ் சமந்த குமார விஜேசிங்க என்பவராவார்.

சந்தேகநபருக்குச் சொந்தமான பிஸ்கட் விற்பனை முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் 20 வயதுடைய இளம் பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொல்கஹவெல பொலிஸார் அவரை நேற்று முன்தினம் பிற்பகல் கைது செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here