மற்றும் ஒரு போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் STF சுற்றிவளைப்பில் கைது

Date:

பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர், பாணந்துறை திக்துடுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய, திட்டமிட்ட குற்றவாளியான பாணந்துறை சாலிந்துவின் நெருங்கிய உறவினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

டுபாயில் இருந்து செயற்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்  தொடர்பை பேணி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...