இலங்கை வருகின்றார் மாலைத்தீவு ஜனாதிபதி

Date:

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, ​​மாலைத்தீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தார்.

மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இந்த உரையாடல் இடம்பெற்றதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான மாலைத்தீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...