ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (14) காலை விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்றம் செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.