வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 107 முறைப்பாடுகள்

Date:

தேர்தல் விதிமீறல் தொடர்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 107 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று வன்னி மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா மாவட்ட அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 152, முல்லைத்தீவில் 137, மன்னாரில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த நிலையங்களுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3  இலட்சத்து 6 ஆயிரத்து 81 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 585 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 பேரும், மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4 ஆயிரத்து 995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 898 பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பில் 107 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளன.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்ட செயலகமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாகச் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...