லாஃப்ஸ் எரிவாயு விலைகள் குறைப்பு

0
12

நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலைகளைக் குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.745 ஆல் குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.5,995 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,720 இலிருந்து ரூ.2,398 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க விடுத்த கோரிக்கை மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த விலைக் குறைப்பு தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here