ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமே ஆடம்பரமான வாழ்க்கையும் வளமான நாடும் உருவாகியுள்ளதாகவும், நாட்டின் சாதாரண மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“இது வெற்றுப் பட்ஜெட். பயனற்ற பட்ஜெட். மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் கிடைக்காத பட்ஜெட்.
திறைசேரியில் பணம் நிரம்பி வழிவதாகக் கூறிய அரசாங்கம், நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறது?
ஜனாதிபதி உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் 159 உறுப்பினர்களுக்கும் ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்துள்ளது. அவர்களுக்கு வளமான நாடு, அழகான நிகழ்காலம், அழகான எதிர்காலம் என அனைத்தும் உள்ளன. ஆனால் நாட்டின் சாதாரண மக்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லை.
மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் வெட்கமற்றதுமான ஒரு வரவு செலவுத் திட்டம் என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
