பிரபாகரன் வழியில் போராடுவோம்

Date:

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

“இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்காக தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய பிரபாகரனை சிங்கள படை மற்ற ஏழு வல்லரசு நாடுகளின் படைகளை கொண்டு அழித்துவிட்டது. விடுதலை புலிகளின் போரின் கடைசி கட்டப் போரில் கடைசி நேரத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இலங்கை சிங்கள கடற்படை இன்றுவரையில் தமிழக வீரர்களை கொல்வது , தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் படகுகள் உள்ளிட்ட பொருட்களை அபகரிப்பது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் தீ இன்னும் அணையவில்லை. இலங்கையில் சிங்கள தேசம் தனி, தமிழர்கள் தேசம் தனி என அமையும் வரையில் மதிமுக தொடர்ந்து பிரபாகரன் வழியில் போராடும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...