வெள்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை

0
134

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரபட்சம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கியதற்காக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் முகமது ரூமி ஆகிய இருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here