மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு

Date:

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.”

  • இவ்வாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் மீண்டும் பிரிவினைவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்குக் கிடையாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்துள்ளார்கள்.

இந்த அரசில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தைத் தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தெற்கில் அரசியல் செய்யும் தரப்பினர் வீணாக அச்சமடையத் தேவையில்லை.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...