பிரபாகரனின் பிறந்த தின நிகழ்வு: சிவாஜிலிங்கம் உட்பட ஐவரிடம் விசாரணை

Date:

யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்த தின நிகழ்வில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தைக் கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய புகைப்படத்தைப் பயன்படுத்த முடியாது என்றும், அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த புகைப்படத்தை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...