16 வயது சிறுமி பாலியல் பிளக்மெயில் – 3 சிறுவர்கள் கைது

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து வீடியோ எடுத்து சிறுமியை உடல் உறவுக்க வருமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய அவளது காதலன் மற்றும் நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் எவரும் இல்லாத போது காதலியை கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு நீயும் உனது காதலனும் உடல் உறவு மேற்கொண்ட வீடியோ இருப்பதாகவும் நீ எங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேர கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...