இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வழங்கினார்.

சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவ, அமைச்சரவை தீர்மானங்களை அமுல்படுத்தவில்லை என குற்றம் சுமத்தி, அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகித்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...