சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

Date:

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள பிரதமர் லீ சியென் லொங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...