தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்ந்தனர்!

Date:

எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சர்வகட்சி மாநாட்டில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்தகட்ட சந்திப்புகளை விரைவாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் கட்சிகள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஜனாதிபதிஹ்யிடம் எடுத்துரைத்தன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...