யானைகளை பார்வையிட ஆன்லைன் டிக்கெட் – மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் தெரிவிப்பு

Date:

பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (26) முதல் இது அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் பொதுக் கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்ட இரண்டு வங்காளப் புலிகளை அவதானிக்கும் நிகழ்வில் நேற்று (25) கலந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

மேலும், QR குறியீட்டைப் பயன்படுத்துதல் மற்றும் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு உரையாற்றிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க;

“தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, ஆன்லைன் முறை மூலம் டிக்கெட்டுகளை வழங்க நாங்கள் பணியாற்றியுள்ளோம். அதன்படி, இன்று முதல் பின்னவல திறந்தவெளி உயிரியல் பூங்கா மற்றும் இந்த டிக்கெட்டுகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்பதிவு செய்யலாம்..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...