‘ரெட் விங்ஸ்’ இன்று முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை!

Date:

ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ‘ரெட் விங்ஸ்’ இன்று (டிசம்பர் 28) முதல் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

மாஸ்கோவை தளமாகக் கொண்ட ரஷ்ய பிராந்திய ஓய்வு விமான சேவையாக சேவையாற்றும் இந்த விமான நிறுவனம், இலங்கையின் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று முதல் வாரத்திற்கு இரண்டு முறை பட்டய விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது.

முதல் சில விமானங்கள் ஏற்கனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், ‘ரெட் விங்ஸ்’ விமான சேவையை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் வர்த்தகப் பணிப்பாளர் ஐ.வி. ட்ரெட்டியாகோவ் தெரிவித்தார்.

அதன்படி, ‘ரெட் விங்ஸ்’ இப்போது இலங்கைக்கு நேரடி விமான சேவையை வழங்கும் மூன்றாவது ரஷ்ய விமான சேவையாகும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...