பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!

Date:

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நபரை பாழடைந்த பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர் சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...